பாடல் :எங்கேயோ பார்த்த மயக்கம் Engeyo Partha
ஆண்: எங்கேயோ பார்த்த மயக்கம் (இசை...) ஆண்: கனவுகளில் வாழ்ந்த நாளை (இசை...) ஆண்: ஆதி அந்தமும் மறந்து ----------------------------------------------------------------------------------- பாடல் : ஒரு நாளுக்குள்Oru Nalukkul ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம் (இசை...) ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய் பெண்: இது ஏதோ புரியா உணர்வு (இசை...) ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு பெண்: தன் வாசனை பூ அறியாது -------------------------------------------------------------- பாடல் : வெண்மேகம் பெண்ணாகVenmegham Pennaga ஆண்: வெண்மேகம் பெண்ணாக உருவானதோ (இசை...) ஆண்: மஞ்சள் வெயில் நீ.. மின்னல் ஒளி நீ.. (இசை...) ஆண்: எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க (எங்கேயோ பார்த்த...)
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓ ஓ ஓ ஓ...
ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஓ ஓ ஓ ஓஹோ
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
ஓஹோ... (ஒரு நாளுக்குள்...)
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா... இல்லை கடவுளா...
புரியாமல் திணறிப் போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில்.. உன் அருகினில்..
உறங்காமல் உறங்கிப் போவேன்
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை... ஒரு எரிமலை...
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்
கண்ணாக்கு கண் கிடையாது
அது புரியலாம்... பின்பு தெரியலாம்...
அது வரையில் நடப்பது நடக்கும்....
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே... (வெண்மேகம்...)
உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ...
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி...
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க...
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ... (வெண்மேகம்...)


0 comments:
Post a Comment